64 A வும் அழகியப்பெண்ணும்

on

MTC_old_bus

வெள்ளிக்கிழமை மாலைப்பொழுது… விடும் மூச்சும், சந்துகள் இல்லாமல் நம் முகத்திலேயே திரும்ப வரும் அளவு நெருக்கியக் கூட்டம் பேருந்தில்.  ஓர் சுவரின் ஓரத்தில் ஒன்டிருக்கும் பல்லியைப் போல ஒரு சீட்டின் ஓரத்தில் நானும் அன்டியிருந்தேன்.

தெற்கு வளர்கிறது, வடக்கு தேய்கிறது” என்பது எவ்வளவு சத்தியம் என்பது எங்கள் பகுதிக்கு விட்டிருக்கும் ஓட்டைப் பேருந்துகளைப் பார்த்தாலே தெரியும். என்னைப் போன்ற நெட்டை உடல்வாகு உள்ளவர்களுக்கு சீட் கிடைத்தாலும் நிற்பதே மேல் என்று தோன்றும் அளவு வசதிகள் இருக்கும் (இறுக்கமான இருக்கைகள்). அப்படி இருந்தும் பிழிந்தெடுத்த சாத்துக்கொடிப் பழம் போல் வேலைப் பளுவால் சோர்வடைந்த என் உடம்பு, உடும்பு ஒட்டிக்கொள்ளும் அளவாவது இடம் வேண்டும் என்று அலைந்தது. அதற்கேற்றார் போல் ஒரு சீட்டின் ஓரம் இடமும் கிடைத்தது அந்த 64 A வில்.

கிடைத்த இடத்தில அடங்கி ஒடுங்கி உட்கார நான் பட்டப்பாடு அப்பப்பா… ஒரு வழியாக பயணம் தொடங்கியது. “இடம் உள்ளே இருக்கு, உள்ள போங்க, உள்ள போங்க” என்ற நடத்துனரின் சொற்கள் “அப்படியே பழகிடுச்சு” என்ற வசனத்தை நினைவு படுத்தியது. “வீர்ர்ர் என்று அழும் குழந்தை, சிலுத்துக்கொள்ளும் பெருசு” என்று தடபுடலாக இருந்தது 64 A பயணம்.

பேருந்துக் கால்நடைக் கல்லூரி அருகே நின்றபோது ஒரு பெண் என் அருகே வந்து நின்றால். வெளிர் மேனி, வட்ட முகம், சில்லென்றக் கண்கள்  ஒவ்வொரு இளவட்டங்களும் ஏங்கும் கலையான முகம் மொத்தத்தில் அழகிய அழகி. அவள் வைத்திருந்த பையிலிருந்து கல்லூரி மாணவி என்பதை அறிந்தேன்.

இவ்வளவு அழகுப் பொருந்தியவள் என் அருகில் நிற்க (இந்தத் தருணத்தில் நான் அக்மார்க் குத்தப்படாத நல்லப் பையன் என்பதைக் கூறிக் கொள்ள விழைகிறேன்) பேருந்து புறப்பட்டது. நேரம் சென்றது உடம்பின் அசதி வாட்ட சோர்வின் விளிம்பில் சென்றேன் இருந்தும் ஒருவிதப் புத்துணர்ச்சி மனதினுள் அந்தப் பெண் அருகில் நிற்கையில்.

நேரம் கடந்தது, சில நிமிடங்களில் என் தோளின்மேல் யாரோ தாங்குவதுப் போல உணர்வு யாரென்று திரும்பிப் பார்த்தல் மேலேக் கூறிய அந்த அழகியப் பெண். ஒருவிதக் கூச்சஉணர்வு உடம்பினுள் ஊடுருவ சற்று எதிர்பக்கம் சாய்ந்தேன். மீண்டும் மேலும் என் மீது சாய்ந்த அந்தப் பெண் என் மனதில் பயத்தைக் கிளப்பினால் இதற்கு மேல் சாய எதிர்பக்கம் இடம் இல்லாமல் மனதினுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பி முறைக்க முயன்று தோற்று அவளைப் பார்த்தேன்(அப்போது தான் தெரிந்தது அழகிய பெண்ணைப் பார்க்கவும் தைரியம் வேண்டும் என்று எனக்கு முன் அனுபவம் இல்லாதக் காரணத்தால்). அவளும் என்னைப் பார்த்து சிறு புன்முறுவல் பூத்தால் பார்க்க அழகாக இருந்தும் அந்தப் புன்னகை என் மனதின் பயத்தை அதிகமே படுத்தின.

ஒரு சில விநாடிகளில் நான் சற்றும் எதிர் பாராமல் அந்தப் பெண் அவளின் புத்தகப் பையை என் மீது வைத்தால் (என் அனுமதியை எதிர் பார்க்காமல்) பயணம் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் அதே சாய்தல் இம்முறை சற்று அதிகமாக என் தோள்மீது. “என்னதான்மா உன் பிரச்சன” என்பதுப் போல் மீண்டும் கேட்க அல்ல பார்க்க அவள் இம்முறை சற்று தயக்கத்தோடு புன்னகைத்து தன் வலதுப் பக்கத்தில் இருந்த ஒருவரைப் முறைத்தால். சற்றுமுன் நிலவின் ஒளியாய் குளுமையை பொழிந்த அந்தக் கண்கள் நெருப்பை கக்கின. “இதற்கு பெயர் தான் அக்னிப் பார்வையோ” என்னும் அளவுக்கு இருந்த அந்த முறைப்பு அழகில் சிறந்த ரம்பை பிறந்ததும் பெண் இனம் தான் மதுரையை எரித்த கண்ணகி பிறந்ததும் பெண் இனம் தான் என்பதை உணர்த்தியது. இந்த உணர்தலுக்கு முன் அந்த பெண்ணின் முறைப்பின் முடிவில் யார் என்று பார்த்த என் விழிகளுக்கு முப்பது வயது மதிக்கதக்க (இந்த வார்த்தை அவனுக்கு அதிகம்) ஒரு ஆண். அடுத்த நொடியே புரிந்தது அங்கு அவன் அரங்கேற்றிய சேஷ்டைகள். அவனை முறைத்து உடனே என்னை நோக்கிய விழிகள் சட்டேன்று மாறியது குளுமையாக.

ஆணும் பெண்ணும் சமம்” என்ற கருத்துக்கள் வந்தாலும் வெளிய செல்லும் ஆண்கள் வெளிய செல்லும் பெண்கள் போல் இன்னல்களையும் வேதனைகளையும் படுவதில்லை என்பதை அன்று தான் கண்கூடாக பார்த்தேன். அந்தப் பெண் என் மீது சாய்தல் தொடர்ந்தது. எழுந்து அந்த பெண்ணுக்கு என் இடத்தை விடலாம் என்ற என் மனது உடம்பின் அசதியால் அதை செய்ய மறுத்தது இருந்தும் விடபிடியான என் மனது என் உடம்பினுடன் சண்டையிட்டு தோற்றுப்போனது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கினால் அந்த பெண் அதற்கடுத்த நிருத்தத்தில் நான் இறங்கினேன்.

என் வீட்டை நோக்கி நடக்கும்பொது பேருந்தில் நடந்தவைகள் என் மனதுக்குள் ஓடின அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுத்திருக்கலாம் கொஞ்ச நேரமாவது அந்த பெண்ணின் கஷ்டத்தைப் போக்கிருக்கலம் என்று திரும்ப திரும்பக் கூறிய என் மனது நான் செய்த மிகப் பெரிய தவறை உணர்த்தியது. மேலும் நடக்க ஆரம்பித்த என் மனதில் இந்த வருடம் கல்லூரிக்குப் பேருந்தில் செல்லவிருக்கும் என் தங்கை முகம் தெரிய கண்ணின் ஓரம் கசிந்தன கண்ணீர் துளிகள் என் தவறை எண்ணி.

ஸ்ரீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s