ஈரோட்டுக் கிழவன் இருந்திருந்தால்

Thanthai_Periyar

நேரயின்மையாலும் வேறுப் பலக்காரணத்தாலும் பதிவுகள் இடாமல் இருந்த சமயத்தில் சில வெறுக்கத்தக்க நிகழ்வுகள் இந்த பதிவை இட செய்தது. தமிழகத்தில் இரு வாரங்களாக பரபரப்பாகவும் பரவலாகவும் விவாதிக்கப்படும் செய்தி “தாலி அறுப்புப் போராட்டம்

“தாலி” தமிழ் பெண்களின் புனிதம் தமிழர்களின் பழமை என்று போற்றப்படுவது. அது அவ்வாரோடு இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் எப்போது அது பெண் அடிமையின் அடையாளமாக காணப்பட்டதோ அப்போதிலிருந்து பிரச்சனைகள் தொடங்கின. அந்தக் காலங்களில் ஒருப் பெண் திருமணமாகி விட்டால் இவனுக்கு இவள் என்று அடையாளப் படுத்த “தாலி”க் கட்டப்பட்டது. ஆனால் இன்று அது புனிதத்தின் அடையாளமாகவும் ஒரு மதத்தின் குறியீடாகவும் மாறி விட்டது.

சிறிதுப் பொறுமையாக யோசித்துப் பார்த்தால் எவ்வளவுப் பெண்கள் இன்றைய சூழலில் தாலி அணிந்துக் கொண்டே இருக்கிறார்கள் எவ்வளவு பேர் குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது மட்டும் அணிகிறார்கள் என்பதை கணக்கேடுத்தால் இருபக்கமும் சரி சமமாகும். ஆகவேப்  புனிதம் என்பது அவரவருக்கே. அடுத்ததாக சிலரின் கூற்று “தாலிப் பெண்களுக்கு வேலி” இது உண்மையானால் தமிழ் நாளிதழ்களின் பக்கங்கள் குறைந்திருக்கும் புரியவில்லையா ? கள்ளக் காதல்கள் இல்லாமல் போயிருக்கும். எனவே தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரவர் விருப்பத்துக்கேற்றது. எப்படி அணிவது அவர் உரிமையோ அணியாமல் இருப்பதும் அவரரவர் உரிமை.

எனக்கு இது விவாதமாக்கியதால் கோபம் இல்லை அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற போரட்டங்களும் முகப் புத்தகத்தில் பதியப் பட்ட இருப் படங்களும் தான் இந்த பதிவு எழுத தூண்டியது. அதில் ஒன்று இருவர் பெரியாரின் படத்தின் மீது சிறுநீர் கழிப்பதைப் போலவும் வேறொரு படத்தில் இருப்பெண்கள் பெரியார் படத்தைக் செருப்பால் அடிப்பதைப் போலவும் பகிரப்பட்டிருந்தது(அந்த படங்களை மறுபடியும் பகிர விரும்பவில்லை). இவர்களுக்கெல்லாம் பெரியார் யார் என்று தெரியுமா தெரிந்தும் அவ்வாறு செய்ய மனம் வந்திருக்குமா என்றக் கேள்வியே மனதில் எழுந்தது. இன்றைய தமிழக சூழலுக்கோ அல்லது பெரியாரின் கடவுள் எதிர்ப்பு கொள்கைக்கோ நான் செல்லவில்லை. ஆனால் அந்த மாமனிதர் தமிழினத்துக்காக ஆற்றியப் பணிகளைக் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்க வேண்டும். போராடுவது தப்பல்ல அடுதுவரை இழிவுபடுத்திக் கருத்தைத்திணிப்பதுக் கண்டனத்திற்குரியது. இதையெல்லாம் காண ஈரோட்டுக் கிழவன் இல்லாமல் போய்விட்டார் இருந்திருந்தால் சிரித்துவிட்டு தன் வேலையை பார்த்திருப்பார்.

” மதத்தை படிக்காதே மனிதனை படி—ஏனென்றால்

மதம் மனிதன் உருவாக்கியது, மனிதன் கடவுள் உருவாக்கியது”

                                                                                                                              ஸ்ரீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s