கொசு

சற்று நீண்ட இடைவேளைக்குப் பின் இன்னொரு கதை மூலம் உங்களை சந்திக்கிறேன். இந்த சிறுகதை ஒரு புதிய பாண்டஸி (FANTASY) முயற்சி படித்துவிட்டு கருத்தைக் கூறவும்.

 START WITH ZERO EXPECTATION.

முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்… CLICK HERE FOR FIRST STORY….

இரண்டாவது கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.CLICK HERE FOR SECOND STORY

மூன்றாவது கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.CLICK HERE FOR THIRD STORY

கொசு

 8-9-13-mosquito-md-gov-jpg

டீக்கடையில்…………………..                          

“அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் மின்னணு கொசு மட்டை வழங்கப்படும்….. கட்டுகடங்கா உற்பத்தி ஆகியிருக்கும் கொசுக்களை கட்டுபடுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை” என்று தினசரியின் தலைப்பை டீக்கடை பெஞ்சில் அமர்ந்து வாசித்தார் சோமு.

“ஆமா இது கொடுத்துட்டா போதுமா அடுத்த பக்கத பாருங்க “டெங்கு,மலேரியா,சிக்குன்குனியாவால் தமிழகத்தில் பலி ஆனவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதம்” இதல இந்த மட்டைய வச்சிக்கிட்டு என்னப் பன்றது அது கொஞ்ச நாளையல ரிப்பேர் ஆகிடும் அதுக்கப்பறம்  என்ன பன்றது” என  சிலாகித்து கொண்டான் குப்பன்.

“ஏங்க இது ஒரு தற்காப்பு நடவடிக்கைதான்….. மட்டைய கொடுக்கறவங்க ரிப்பேர் ஆனா அத சரி செய்ய வழியையும் சொல்லுவாங்க எனக்கென்னமோ இந்த திட்டத்தால கொசு பிரச்சனை குறையும்னு ஒரு நம்பிக்கை இருக்குது….” என்று சொல்லும் பொழுதே அவர் கன்னத்தின் ரத்தத்தை உரிந்து கொண்டிருந்த இரண்டு கொசுக்கலை “சப்” என்று அடிக்க கை முழுதும் இரத்தம் .

 

சென்னை சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் ……………………

“கொசு மருந்த விக்கறானுங்களா இல்ல வெறும் தண்ணிய கலந்து விக்கறாங்கள தெரில கொசு மருந்த போட்ட ஒரு கொசு சட்டப் பண்ண மாட்டேங்குது……. மாசம் இது ஒரு தண்ட செலவு” என்றப்படியே ஜன்னல்களை சாற்றினார் வாசன்.

“ஆறு மணி ஆனாலே எதோ போருக்கு போற மாதிரியே இருக்கு ஒவ்வொரு நாளும்……..எவ்ளோ தான் கதவ, ஜன்னல மூடினாலும் எப்படியாவது கொசுக்கள் வந்துடுதுங்க….” என்று வெறுத்துக்கொண்டால் ராணி

“ஏண்டி பின் கதவ மூடினியா? என்று உரக்க ஒலித்தது வாசனின் குரல்.

இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆறு மணிக்கு நடைப்பெறும் நிகழ்ச்சியாகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் கொசுக்களின் எண்ணிக்கை கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது. அரசும் மக்களும் பல மருந்துகள் பல கோடிகள் பல வழிகளை உபயோகப் படுத்தினாலும் கொசுக்களை அசைக்க முடியவில்லை. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் என கொசுக்களால் வரும் நோயினால் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் இறந்து விட்டார்கள். கொசுக்கள் அரசுக்கு மிகப் பெரிய சவாலாக ஆகிவிட்டது.

கொசுக்களை கட்டுபடுத்த அரசு, விஞ்ஞானி ராவ் தலைமையில் ஒரு குழு அமைத்தது இந்த குழு மூலம் அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் நிலைமை சீரடையவில்லை. கடைசியாக இந்த குழு பரிந்துரைத்தது தான் மின்னணு கொசு மட்டை அதன் படி அரசும் பல்லாயிர கோடிகளை செலவழித்து ஒரு மாதத்தில் அனைவருக்கும் இலவசமாக மின்னணு கொசு மட்டை வழங்க ஏற்பாடு செய்தது..

மார்ச் 1 ம் தேதி முதல் அனைவருக்கும் மின்னணு கொசு மட்டை வழங்கப்பட்டது அன்று முதல் தமிழகத்தில் தீபாவளி தான் மக்கள் ஆர்வமாக கொசுக்களை அடித்து கொண்டிருந்தனர் எந்த திசை திரும்பினாலும் “டப் … டப்” என்று சத்தம். கொசு மட்டையில் அடிக்கும் ஷாக்கில் கொசுக்கள் கருகிப் போயின.

கூவம் நதியும் கடலும் ஒன்று சேரும் இடம், இரவு 12 மணி

சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறு சிறு மலைகள் போல ஒன்றன் மீது ஒன்றாக பல லட்சக்கணக்கான கொசுக்கள் அமர்திருந்தன. மக்கள் பயன்படுத்தும் கொசு மட்டைப் பற்றி ஒவ்வொரு கொசுவும் பேசிக் கொண்டிருந்தன. சில கொசுக்கள், “அதை கண்டுபிடித்தவன் குடும்பம் விளங்காமல் போக” என சாபமெல்லாம் விட்டுக்கொண்டிருந்தன

“தலைவர் ரங்குஸ்கி வரார் அமைதியாய் இருங்கள்” எனக் கூட்டத்தில்  ஒரு குரல் ஒலித்தது. அத்தனை லட்சக் கொசுக்களின் நடுவில் கொசுக் கூட்டங்களின் தலைவர் ரங்குஸ்கி வந்து நிற்க அனைத்துக் கொசுக்களும் ஆரவாரம் செய்தது.

“அமைதி, அமைதி” என தன் உரையை தொடங்கியது ரங்குஸ்கி.

“நாம் இங்கு எதற்கு கூடியிருக்கிறோம் என்று அனைவர்க்கும் தெரியும் பல கோடிகளாய் இருந்த நம் எண்ணிகையை மனித அரக்கர்கள் கடந்த இரண்டு நாட்களாக குறைக்க தொடங்கியிருக்கிறார்கள். இப்படியே விட்டு விட்டால் நம் இனத்தை அடியோடு அழித்து விடுவார்கள் விரைவில்  அவர்களுக்கு சரியான பாடம் புகட்டியாகவேண்டும், நம்  இனத்தை காக்கவேண்டும். இப்போது ஏரியா பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துகளைக் கூறலாம்.”

வியாசர்பாடி ஏரியா பொறுப்பாளர் மங்குஸ்கி, “நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நம் எதிரிகளுக்கு சரியான பாடம் புகட்டியாக வேண்டும். உங்கள் ஆணைக்காக காத்திருக்கிறோம்”

மற்ற ஏரியா பொறுப்பாளர்களும், உறுப்பினர் கொசுக்களும் “ஆம்…. ஆம்“ என ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன.

மீண்டும் “அமைதி…. அமைதி” என கூட்டத்தை சமாதான படுத்தியது ரங்குஸ்கி.

“தலைவர் சொல்வது மிகவும் சரி நம் எதிரிகளுக்கு நாம் யாரென்று காட்ட வேண்டும்… ஆனால் அரசு இலவசமாக கொடுத்துள்ள மின்னணுக்  கொசு மட்டையை நம் வீரர்களால் சமாளிக்க முடியவில்லை அதில் அடிக்கும் ஷாக்கில் கருகி விடுகிறார்கள் நானே இருமுறை தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினேன்….. இதை எப்படி சமாளிப்பது?” என சைதாப்பேட்டை சங்குஸ்கி கேட்டது.

அதற்கு தலைவர் ரங்குஸ்கி “முடியும் நிச்சயமாக முடியும்…. 1980-ல் நம் முன்னோர் கொசு மருந்துகளுக்கும், கொசுவத்தி சுருளுகும் எதிராக செய்த ஜீன் (gene) மாற்றப் போர் ஞாபகம் இருக்கிறதல்லவா. ஜீன் மாற்றம் செய்தப் பின் கொசுவத்தி சுருள், மருந்துகள் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை அதுப்போல ஜீன்(gene) மாற்றம் தற்போது செய்யவேண்டும்”.

காசிமேடு கன்னாஸ்கி “எப்படி செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே அதை வெற்றியோடு செய்து காட்டுகிறோம்” என சூளுரைத்தது.

“சொல்கிறேன்……. இன்றிலிருந்து சித்ரா பௌர்ணமி வரை நம் இனத்தவர் யாரும் மனித உயிர்களை கடிக்க கூடாது, அவர்களின் ரத்தத்தை அருந்தக்கூடாது அப்படி விரதம் இருந்து சித்ரா பௌர்ணமி அன்று நம் அனைவரின் உமிழ் நீரையும் எடுத்து ஒன்றாக கலந்து நம் முன்னோர் சொல்லி கொடுத்த மந்திரத்தை ஓதினால் நம் உடம்பில் ஜீன் மாற்றம் ஏற்படும். அந்த ஜீன் மாற்றம் நம் உடம்பில் இன்சுலேஷன் (insulation) சக்தியை உருவாக்கும் அந்த சக்தியினால் எவ்வளவு உயர் அழுத்த ஷாக் அடித்தாலும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. அதன் பின் நாம் மனித இனத்தை பழிவாங்கி விடலாம்” என்றது.

உடனே அனைத்துக் கொசுக்களும் குதுகளித்தன.

“நம் நாட்டு இனத்தவர் மட்டும் இதில் பயனடயாமல் உலகத்தில் உள்ள அனைத்து கொசுக்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும் உடனே அனைத்து நாடுகளுக்கும் செய்தி அனுப்புங்கள்” என்று ஆணையிட்டது ரங்குஸ்கி.

மறுநாள் முதல் ஒரு கொசுக் கூட மக்களை கடிக்க வில்லை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். உலகில் உள்ள கொசுக்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம் என ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இரண்டாம் நாள் இரவு சுகாதாரத் துறை அமைச்சர், விஞ்ஞானி ராவ்க்கு போன் செய்து “கன்க்ராட்ஸ் ராவ், வெற்றி……. கொசு இனமே அழிந்து விட்டது நாம் கொடுத்த கொசு மட்டைக்கு பயந்து கடந்த இரண்டு நாட்களில் ஒரு கொசுக் கூட மனிதரை கடிக்க வரவில்லை நாம் ஜெயித்து விட்டோம்” என மகிழ்ச்சியாக கூற……. விஞ்ஞானி ராவுக்கு முகம் மாறியது “சரி நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன் முக்கிய வேலை இருக்கிறது” என்று அமைச்சரிடம் கூறிவிட்டு தன் புத்தக அலமாரிக்கு ஓடினார் அங்கே ரிச்சர்ட் பெர்னார்ட் எழுதிய “கொசுக்களின் புரட்சி” (THE REVOLUTION OF MOSQUITO) என்ற நூலை எடுத்து வேகமாகப் புரட்டினார். அதில் 1980-ல் நடைபெற்ற ஜீன் மாற்றம் பற்றி முழுவதும் படித்து அதிர்ந்தார்.

“ஒ மை காட் (OH MY GOD)  என்று தலையில் கை வைத்து கீழமர்ந்தார்.

அமைச்சரிடம் எல்லா விடயத்தையும் கூறி முப்படை தளபதிகளின் கூட்டத்தை உடனே கூட்டுமாறு வேண்டினார். அதற்கு அமைச்சர் “கொசுக்களுக்கு முப்படைகளா? இது என்ன விளையாட்டா?” எனக் சிரித்துக் கொண்டே கேட்க அதற்கு ராவ் “ஜீன் மாற்றம் மட்டும் நடந்தால் டைனாசர்ரசால் உலகம் பட்ட அவஸ்தையை விட பல மடங்கு ஆபத்தை உலகம் சந்திக்கும்” என எச்சரித்தார். உடனே அமைச்சர் கூட்டத்துக்கு அனுமதி வழங்கினார்.

முப்படை தளபதி இடையே கொசுக்களின் ஜீன் மாற்றத்தையும் அதன் ஆபத்துகளையும் விளக்கி கூற அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர் “இது மனித இனத்திற்கு கிடைத்திற்கும் ஓர் அறிய வாய்ப்பு உலகில் உள்ள அனைத்து கொசுக்களும் ஓரிடத்தில் கூடுகின்றன அனைத்தையும் அழிக்க இதுவே சரியான தருனம்,  நாம் தாக்குதல் நடத்தும்போது ஒரு கொசு தப்பித்தாலும் அது ஆபத்து எனவே ஒரே தாக்குதல் அனைத்தும் இறக்க வேண்டும்” என்றார்.

கப்பல் தளபதி, “கடல் மூலம் தாக்குதல் நடத்தலாம் தண்ணீர் வழியே ராக்கெட் குண்டை செலுத்தி தாக்குதல் நடத்துவதே சிறந்ததாக இருக்கும்” என்றார் அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இறுதியில் அமைச்சர் “இந்த விடயம் மக்களுக்கு தெரியாதவண்ணம் நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார்” என தெரிவிக்க. அனைவரும் அதற்கும்  சம்மதம் தெரிவித்தனர்.

சித்ரா பௌர்ணமி இரவு 12 மணி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. அழகிய சந்திரன் வானில் வாய் பிளந்து வீற்றிருக்க, தாக்குதல் நடத்தும் கப்பல் கடலில் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது. கடலும் கூவ நதியும் சேருமிடத்தை சாட்டிலைட் மூலம் கண்காணித்து வந்தனர் நேரம் செல்ல செல்ல பெரிய பெரிய மலைகள் போல் கொசுக்களின் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது அனைத்து கொசுக்களும் உமிழ் நீரை கக்க ஆரமித்துக் கொண்டிருந்தன இவை அனைத்தையும் கண்காணிப்பு அறையிலிருந்து ராவ், தளபதிகள், அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டு வந்தனர். சிறிது நேரத்தில் கொசுக்கள் வரவு நின்றது.

விஞ்ஞானி ராவ் தலையசைக்க, கப்பல் படை தளபதி “பையர் (FIRE) என்று ஆணையிட்டார் அடுத்த நொடியில் “சர்… சர்… சர்… சர்…” என்று நான்கு குண்டுகள் பாய்ந்தன அந்த இடமே புகை மூட்டமானது கொசுக்கள் அனைத்தும் சின்னாபின்னமானது ஒரு கொசுக்களாலும் தப்பிக்க இயலவில்லை. கண்காணிப்பு அறையில் அனைவரும் கட்டி தழுவி ஆர்பரித்தனர்.

மறுநாள் காலையில் செய்திதாள்களும் ஊடகங்களும் கொசுகளுக்கேதிரானப் போர் பற்றிய செய்திகளை மக்களுக்கு அறிவித்தது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினர். விஞ்ஞானி ராவுக்கு முதலமைச்சர், பிரதமர், பாராட்டுக்கள் குவிந்துக் கொண்டிருந்தது.

ஓரிரவு கொசுக்களால் தூக்கம் கெட்டு நடுராத்திரியில் எழுந்து உட்கார்ந்துக் கொண்டு உலகில் உள்ள கொசுக்கள் அனைத்தையும் அழித்தால் எப்படி இருக்கும் என எண்ணி எழுதியக் கதை.

ஸ்ரீ

PLEASE COMMENT DOWN….

FORGIVE TYPO ERRORS

CLICK FOLLOW TO GET UPDATES ABOUT MY PAGE

Advertisements

3 Comments Add yours

  1. Saba-Thambi says:

    Great imagination. Well written.

  2. Akila says:

    this is everyone wish…superb story

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s