காயத்திரியின் கல்யாணம்

என்னுடைய மூன்றாவது சிறுகதையில் சந்திப்பதில் மகிழ்ச்சி. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.

முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்… CLICK HERE FOR FIRST STORY….

இரண்டாவது கதையை படிக்க இங்கு கிளிக்கவும்.CLICK HERE FOR SECOND STORY

காயத்திரியின் கல்யாணம்

Aக வேண்டும். எந்த ஒருக் குறையும் இல்லாமல் திருமணம் ஏன் தடை படுகிறது? என்றால் அதற்கான விடை இறைவன் ஒருவனிடத்தே தானே இருக்கிறது.

“இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவாங்க… சீக்கிரம்…” என்ற படியே சமையலறை சென்றாள் கற்பகம்.

திருமணமாகவில்லையே என்ற கவலை மனதில் இருந்தாலும் அதை துளியும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள் காயத்திரி. “தன்னை விட்டால் இப்படியே சுதந்திரமாய் இருந்துவிடுவேன் திருமணம் ஒருப் பெண்ணை அடிமை ஆக்கிவிடும்” போன்ற பெண்ணியச் சிந்தனைச் செடிகள் மனதில் இருந்தாலும் தாய் தந்தையின் ஏக்கங்களுக்காக அவற்றிற்கு நீரூற்றாமல் இது நாள் வரை இருந்து வருகிறாள் காயத்திரி.

பத்து நிமிடங்கள் கழித்துக் காசிநாதனின் கைபேசி அலறியது. ஆர்வத்துடன் எடுத்த காசிநாதன் பேசப் பேச முகம் சுருங்கியது “சரிங்க…” என்று வைத்த நொடியில் யார் என்றால் கற்பகம்.

“ப்ரோக்கர் பரமசிவன்….”

“என்னவாம்…? கிளம்பிட்டாங்கலாமா…? எங்க வராங்கலாம்…? என்று கேள்விகளை அடுக்கினால் கற்பகம்.

“வர வழில கார் பஞ்சர் ஆய்டுச்சாம்… இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமாம்…” என்றார் சுருதிக் குறைவாக. “கடவுளே உனக்கு என்ன குறை வச்சோம்… இப்படி எங்க மகளை சோதிக்கரையே… “ என்று புலம்ப ஆரமித்து விட்டால் கற்பகம்.

“என்னப்பா இதுவும் புஸ்ஸ்ஸா…” என்று கிண்டலாக கேட்டாள் காயத்திரி.

“இல்லமா… இன்னும் இரண்டு மணி நேரத்துல வந்துட்ராங்கலாம்” என்று தன் மகளுக்கு ஆறுதல் கூறுவதுப் போல் தன்னையே தேற்றிக்கொண்டார் காசிநாதன்.

“அடப் போங்கப்பா நீங்க வேணும்னாப்  பாருங்க பொண்ணோட ராசி சரியில்ல இந்த இடம் வேண்டாமென்று சொல்லிட்டாங்க மாப்பிள்ளை வீட்டுகாரங்கன்னு ப்ரோக்கர் அடுத்து போன் பண்ணுவார் பாருங்க” என்றால் காயத்திரி.

இது கிண்டலுக்காக அல்ல, விரக்தியின் வெளிப்பாடு என்றுத் தெரியாதவர் அல்ல காசிநாதன். அதனால் ஏதும் பேசாமல் சென்றுவிட்டார்.

இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே என்று தன் டைரியை எடுத்தால் காயத்திரி. ஆம், காயத்திரிக்கு உற்ற தோழன் என்றால் அந்த டைரிதான். காயத்திரியுடைய சிரிப்பு, கோபம், அழுகை, வெட்கம், வீரம் என அனைத்தும் அறிந்து வைத்திருந்தது அந்த டைரி அவளின் எழுத்தினால். எந்த ஒரு நிகழ்வானாலும் அதை அந்த டைரியில் ஏற்றிவிடுவாள்  எழுத்துக்களாய். அதனால்தான் என்னவோ திருமணத் தடங்கலுக்கானத் தடையம் சிறிதும் அவள் முகத்தில் இருப்பதில்லை.

டைரியை திறந்த உடன் பதினேழாம் மாப்பிள்ளை பக்கம் வந்தது……

“ஏம்மா… உனக்கு சாமி கும்முடனும்னா நீ மட்டும் வர வேண்டியது தானே எதுக்கு என்னை இந்த கூட்டத்துல கூட்டி வந்து அல்லோலகப் படுத்துற???” என்று சாமியை தரிசித்து விட்டு கடிந்துக் கொண்டால் காயத்திரி.

“எல்லாம் உனக்காக தாண்டி… எந்த வரணும் உனக்கு பொருந்த மாட்டுது… நாளைக்கு வரப் போற மாப்பிள்ளையாவது  உனக்கு முடியனும்… அதுக்கு தான் உன்ன கூட்டிட்டு வந்தேன்… சும்மா சிலுத்துகர…” என்றால் கற்பகம்

“ஆமா… முடிஞ்சிட்டாலும்” என்றால் வெறுப்பாக. ஒவ்வொரு முறையும் துணிக் கடை பொம்மைப் போல் சீவி சிங்காரித்து அவையில் நின்றுப் போலியான வெட்கத்தை வெட்கத்துடன் வெளிக்காட்டி….. மதிக்காமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்லும் மாப்பிள்ளைகள் மேல் வெறுப்பு வரத்தானேச் செய்யும்.

வீட்டுக்கு கிளம்பலாம் என்று எழும்போது காயத்திரியுடன் கல்லூரியில் படித்தத் தோழி மீனா… காயத்திரியை தற்செயலாக பார்த்தால்

ஹே…!!! காயு…. வாட் எ ப்லசன்ட் சர்ப்ரைஸ்….(what a pleasant surprise) எப்டி இருக்க… எவ்ளோ நாள் ஆச்சு பாத்து….” என்று மீனாக் கூறக் களிப்பில் “நல்லா இருக்கேண்டி… எப்போ அமெரிக்காலேர்ந்து வந்த” என்றால் ஆர்வமாக “ஒரு வாரம் ஆகுதுடி அம்மா அப்பாவப் பாக்க இந்தியா வந்தேன்…” என்றால் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மீனாவை ஒரு நான்கு வயதுச் சிறுவன் ஐந்து முறைக்குமேல் உரிமையாகச் சுற்றினான். அதைப் பார்த்த காயத்திரி “யார்டி உன் பையனா?” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டால். முத்தமிட்ட எச்சிலை துடைத்து கேள்வி குறியுடன் காயத்திரியைப் பார்த்தான் அந்தச் சிறுவன். “ஆமாண்டி… என் பிள்ளைத் தான்…. உன் குழந்தைங்க எங்கடி…. ? விளையாட்ராங்களா???” என்றப்படியே இருமுறை எட்டிப் பார்த்தால் மீனா.

“அடியே… ஐ யாம் எ ப்ரீ பேர்ட் ( I Am A Free Bird )….இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல” என்று நகைத்தாள் காயத்திரி.

“எங்கம்மா…. எவ்ளோ பேரு வந்து பாக்குறாங்க ஒரு வரன் கூட அமைய மாட்டேங்குது” என்று புலம்பலை ஆரம்பித்தால் கற்பகம். சற்று சுதாரித்துக் கொண்டு “கவலைப் படாதீங்க ஆண்ட்டி (aunty) சீக்கிரம் செட் ஆய்டும்…. அவர் தேடுவாரு உன் கல்யாண இன்விடேஷனோட மீட் பண்லாம்…. ஆல் தி பெஸ்ட்” என்று நகர்ந்தால் மீனா.

“உன் வயசு பொண்ணுங்க குடியும் குடுத்தணுமா இருக்குங்க… உன்ன மட்டும் ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ….” என்று கற்பகம் ஆரம்பிக்க “அம்மா போதும் ஆல்ரெடி சாமி கிட்ட புலம்பியாச்சு…” என்றால் காயத்திரி.

“உனக்கு எங்கேர்ந்து தெரியப்போது என்னோட கஷ்டம்…. நாளைக்கு வரப்போற மாப்பிளையாவது அமையனும்…. என்ன குறை இருந்தாலும் ஒத்துக்க…” என்றால் கற்பகம்.

“ஆமா இவ்ளோ நாள் குறை சொல்லி நான் தான் தட்டி கழிச்சேன் பாரு…..” என்று இருவரும் வீட்டுக்கு நடையைக் கட்டினர்.

வழக்கமானப் பரபரப்புடன் பதினேழாவது மாப்பிள்ளையும் வந்தார் காயத்திரியைப் பார்க்க. ”பொண்ண அழைச்சிகிட்டு வாங்க” என்று கணீர் குரல் ஒலிக்க கற்பகம் காயத்திரியை அழைத்து வந்தால்.

“வணக்கம் சொல்லுமா” என்று கற்பகம் கூற அவையில் அனைவரையும் வணங்கினால் காயத்திரி.

சற்று நிலவுக்கே சவால் விடும் ஒளிவீசும் முகத்தை நிமிர்த்தி மாப்பிள்ளையை பார்த்த காயத்திரிக்கு அதிர்ச்சி. பதினேழாவது மாப்பிள்ளைக்கு படிய வார முடி இல்லை வழுக்கைத் தலை. அப்போது தான் “என்ன குறை இருந்தாலும் ஒத்துக்க” என்று அம்மா சொன்ன வார்த்தைகள் ரிபீட் மோடில் ( REPEAT MODE ) ஒலிக்கும் பாடல் போல திரும்பத் திரும்ப ஒலித்தன.

சர்வ லட்சணம் பொருந்தியப் பெண்கள் அவலட்சனமிகுந்த ஆண்களை எப்படி திருமணம் செய்திருப்பார்கள் என்றப் பல நாள் கேள்விக்கான விடை அப்போது தான் அவளுக்கு தெரிந்தது.

சிறிது நேரம் கழித்து அந்த அவலட்சணம் மற்றொரு அவலட்சனத்தின்க் காதை கடித்தது. உடனே “சரி நாங்க கிளம்பறோம்…. போய்விட்டு போன் செய்றோம்” என்றது மீண்டும் அந்த கணீர் குரல்.

அவர்கள் சென்று மூன்றாவது மணி நேரத்தில் கைப்பேசியில் ப்ரோக்கர் பரமசிவன் “அய்யா… பாப்பா ஒல்லியா இருக்குதுன்னு மாப்பிள்ளை வீட்ல நினைக்கிறாங்க அதனால  நம்ம வேற இடம் பாத்துக்கலாம் அய்யா” என்றுப் போனை கட் செய்தார்.

“என்னதான் பண்றது…. எப்படி தான் இவளக் கரை ஏத்தப் போறமோ…” என்று தலையில் கை வைத்து அமர்ந்தார்க் காசிநாதன்.

“ஏங்க நம்ம ஜோசியர் குருசாமி கிட்ட போயிட்டு இவளுக்கு எப்ப தான் கல்யாணம் நடக்கும்ன்னு கேட்டு வரலாமா…?” என்றால் கற்பகம்.

“சரி வா…” என்று காயத்திரியின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியர் வீட்டுக்கு சென்றனர் இருவரும்.

கிரகக் கணக்கு, மனக் கணக்கு, விரல் கணக்கு என்றுப் போட்டு “அருமையான ஜாதகம்” என்று ஜாதகத்தை கீழே வைத்தார் ஜோசியர் குருசாமி.

அதைக் கேட்டு பூரிப்படைந்தனர் இருவரும் “எங்க சாமி கல்யாணம் தள்ளி போய்ட்டே இருக்கு எதாவது தோஷம் கீஷம் இருக்கானுப் பாருங்களேன்” என்றால் கற்பகம்.

“தோஷமா…? நீங்க ஒன்னு…. ஆத்துலப் போற தண்ணி மாதிரி தெளிவா இருக்கு ஒரு பிரச்சனையும் இல்ல” என்றார் ஜோசியர் குருசாமி.

“பின்ன… ஏன்தான் திருமணம் தள்ளி போய்ட்டே இருக்கு?” என்று காசிநாதன் கேட்க “எல்லாத்துக்கும் ஒரு நேரமன்னு வரணும்ல… தை மாசம் குருபலன் வருது… தைப் பொறந்தா வழிப் பிறக்கும் போங்க” என்று ஜோசியர் குருசாமிக் கூறி அவர்களை தேற்றினார்.

வீட்டுக்கு வந்து ஜோசியர் குருசாமி கூறியதை காயத்திரியிடம்க் கூறினால் கற்பகம் “அடப் போமா நீங்களும் உங்க ஜாதகமும்” என்றப் படியே தன் டைரியை எடுத்து எழுதத்  தொடங்கினால் காயத்திரி.

            வாழ்க்கை என்னும் கடலை

            ஒரேக் கப்பலை வைத்துக் கடக்க முடியாது

            அதுவும் பெண்களால் முடியவே முடியாது

            பெற்றோர் என்னும் கப்பல் என் பாரம் தாங்காமல்

            என்னை மற்றொரு கப்பலில் ஏற்றப் பார்கிறார்கள்

            அது ஓட்டைக் கப்பல் என்று தெரிந்தும் கூட

            கப்பலேத் தேவையில்லை நீந்தியே

            கரையை கடப்பேன் நான்…. விடுவார்களா???

            பெண்ணிற்க்கான சாபக்கேடுத்தானே இது…

            பதினாரு முறைப் படை எடுத்து

            இந்தியப் பெண்ணை ( நாட்டை ) கவர்ந்தானம் கஜினி முகமது

            பதினேழு முறை மாப்பிள்ளைகள் படை எடுத்தும்

            இந்தப் பெண்ணை கவர முடியவில்லை – இதிலிருந்து

            என் அருமை புரியும், நான் யாரென்று தெரியும்  

                                                                 —- காயத்திரி

என்று படித்து முடித்தால். “பதினெட்டாம் மாப்பிள்ளை” ன்னு தலைப்பு போட்டுடனும் போலயே  காயு…. என்று மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டால்.

கார் சத்தம் கேட்டது “அவுங்க வந்துட்டாங்க…” என்றுக் கூறிக் கொண்டே மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க வாசல் வரைச் சென்றார் காசிநாதன்.

பதினெட்டாம் மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும் வந்து வீட்டினுள் அமர்ந்தனர் ”பொண்ண அழைச்சிகிட்டு வாங்க” என்று ப்ரோக்கர் பரமசிவனின் கணீர் குரல் ஒலிக்கக்  கற்பகம் காயத்திரியை அழைத்து வந்தால் “வணக்கம் சொல்லுமா” என்று கற்பகம் கூற அவையில் அனைவரையும் வணங்கினால் காயத்திரி.

“இவரு….. தான்மா…. மாப்பிள்ளை பேரு மணிகண்டன்…” என்று பரமசிவன் அறிமுகம் செய்ய தலை நிமிர்ந்து மணிகண்டனைப் பார்த்தால் காயத்திரி. இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்தார்ப் போல் அழகிய உருவம், திரண்ட கன்னம், அடர்த்தியான முடி, என சர்வலட்சனமும் பொருந்த இருந்தான் மணிகண்டன்.

“அண்ணனும் நோக்கினால் அவளும் நோக்கினால்” என்றப் படி இருவரும் பார்க்க பலக் கோடி யூனிட் மின்சாரம் இருவர் கண்களுக்கும் இடையே கடத்தியே இல்லாமல் கடந்துச் சென்றது.

“என்னப்பா பொண்ணப் புடிச்சிருக்கா?” என பரமசிவன் கேட்க “புடிச்சிருக்கு” என்று பொட்டில் அடித்தார்ப் போல பதில் வந்தது மணிகண்டனிடமிருந்து.

   பதினெட்டாம் படி ஏறி மணிகண்டனை தரிசித்து விட்டால் போலும் நம் காயத்திரி.

தைப் பிறந்ததும் வழிப் பிறக்கும் என ஜோசியர் குருசாமி சொன்னதுப்  பலித்துவிட்டது.

அப்புறம் என்னங்க…. இன்னும்… எல்லாரும் காயத்திரி மணிகண்டன் கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணிடுங்க பத்திரிக்கை வைக்க உங்க வீட்டுக்கு விரைவில் வருவோம்

இங்ஙனம் உங்கள் வரவை எதிர்நோக்கும் காயத்திரியின் தம்பி

ஸ்ரீ 

PAINTING CREDITS: ILAYARAJA

PLEASE COMMENT DOWN….

FORGIVE TYPO ERRORS

CLICK FOLLOW TO GET UPDATES ABOUT MY PAGE

Advertisements

5 Comments Add yours

  1. Akila says:

    superb story

  2. Awesme story sri…. writing style is extroadinary 🙂 🙂 grt way to go 🙂 🙂 good luck for ur future 🙂 🙂 expecting good stories like this 🙂 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s