அப்பா… மகன்…

என் முதல் சிருகதையை படித்து விமர்சனம் கூறியதற்கு மிகுந்த நன்றிகள். இரண்டாவது சிருகதையுடன் உங்களை சந்திப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி. இதை படிக்கத் தொடங்கும் முன்பு முதல் கதையின் அனுபவத்தை அடியோடு மறந்திடுங்கள்.

BOTH ARE DIFFERENT GENRE SO MAKE YOUR EXPECTATION TO ZERO GRADE AND PROCEED.

முதல் கதையை படிக்க இங்கு கிளிக்கவும்…. CLICK HERE FOR FIRST STORY….

அப்பா… மகன்…

72ace-images6987

“இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கைய ஏன்தான் படைத்தானோ ஆண்டவன்  தினம் செத்து பிழைக்கவேண்டியதா இருக்குது” என்று புலம்பி கொண்டே அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார் ராஜன்.

அடர்ந்த மீசை, குள்ளமான தோற்றம், எப்போதும் “ஏன் தான் இந்த வாழ்க்கையோ ?” என்ற கேள்வியோடு முகம் என்று அடையாளம் சொன்னால் புதிய மனிதர் கூட எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் நம் ராஜனை. தமிழாள் தானே நீங்க……என்று கேட்கும் அளவுக்கும் பாரம்பரியத்தைச் சுமக்கும் மனைவி லட்சுமி, பல வருடங்களுக்கு முன்னரே தோளுக்கு மேல் வளர்ந்த (ராஜன் குள்ளமானவர் என்பதை மனதில் கொள்ளவும்) பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மகன் கோகுல். அரசின் அறிவுரை படி “நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்பதை பின்பற்றி வாழ்ந்தாலும் அரசு கொடுக்கும் சம்பளத்தில் மட்டும் வாழமுடியவில்லை. அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்த இத்தனை வருடத்தில் மகனின் படிப்பை தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி இல்லை.

அப்படி என்னதான் அப்பாவுக்கும் மகனுக்கும் பொருத்தமோ… எப்பொழுதுமே பிரச்சனை என்ற வருத்தம் ராஜனின் மனைவி மனதை வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம், ராஜனும் கோகுலும் எலியும் பூனையும் போல…. இருவருக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதும் தன் மகனை காரணமின்றியே கரித்துக்கொட்டி கொண்டே இருப்பார் ராஜன். சரி அவர் தான் அப்படி அவர் குணத்தை அறிந்து அனுசரித்து செல்லாமல் அவர் மகன் கோகுலும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பான். இவர்கள் பிரச்சனைகளில் மத்தியஸ்தர்களாக வருபவர்கூட யார் சரி யார் தவறு என்று கூற முடியாத அளவு உப்புச் சப்பு இல்லாத சண்டைகளாக இருக்கும்.

“என் வாழக்கை சிறைப் பட்ட நாளை குறிக்க இருந்தது இந்த ஒரு வாட்ச் மட்டும் தான்…. நாலு வருஷமா இது கூட மக்கார் பண்ண  ஆரமுச்சிடுச்சு” என்று தன் கல்யாண நாள் அன்று பரிசாக வந்த கைகடிகாரத்தை வெறித்தனமாக தட்டி கொண்டிருந்தார் ராஜன். நான்கைந்து முறை தட்டினால் தான் ஓடும் அதுவும் 8 மணிநேரம் தான்.

“அத தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கலாம் ல” என்றார் லட்சுமி

“வர வருமானத்துல எங்கேர்ந்து….. இத என்னிக்கு தான் திருத்த போறனோ, இதே போல திருந்தாதது நிறைய வீட்ல இருக்கு” என்று அந்த சமயத்தையும் தன் மகனை குத்தி காட்ட பயன் படுத்தி கொண்டார் ராஜன். சாப்பிடுவதற்காகக் உட்கார்ந்த கோகுல் சாப்பிடாமல் தந்தை தன்னை மறைமுகமாக திட்டியதைக் கேட்டு எதுவும் பேசாமல் கல்லூரி பையை எடுத்துக் கிளம்பினான்.

உடனே… “காலேஜ்லேர்ந்து வரும் போது வீரண்ணன் கிட்ட சீட்டு துட்டு எவ்ளோன்னு கேட்டுவரச்சொல்லு” என்று தன் மகனுக்கு உரைப்பதைப் போல் தன் மனைவிக்குச் சொன்னார்.

அங்கிருந்து “அதெல்லாம் என்னால செய்ய முடியாது நான் ஒன்னும் இந்த வீட்டு வேலக்காரன் இல்ல” என்று கோகுலின் குரல் ஒலித்தது.

“வர…வர… கழுதைக்கு திமிரு ஏறிடுச்சு ஒரு நாள் வெச்சுக்கிறேன்” என்று பையை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பினர் ராஜன்.

பொழுது விடிஞ்சு பொழுது சாஞ்சா இந்த சண்டைகளுக்கு நடுவே உழன்றுழன்று எந்த விட சலனமும் இன்றி வேலையை தொடர்ந்தார் கோகுலின் அம்மா.

மறுநாளும் அதே காட்சி… பல நாளுக்கு முன்பே காலாவதி ஆனா தன் கைக் கடிகாரத்தை தட்டி கொடுத்திருந்தார் ராஜன். கல்லூரிக்கு கிளம்பும் நேரத்தில் அடுப்படியில் இருக்கும் அம்மாவிடம் சென்று

“ம்மா  300ரூபா காலேஜ்க்கு வேணும் ம்மா” என்றான் கோகுல்.

“என்னது! 300ரூபாவா எதுக்கு அவ்ளோ காசு இரண்டுவாரத்துக்கு முன்னாடி தானே ஆயிர ரூபா வாங்கனே, போனவாரம் 400ரூபா  வாங்கன… என்ன விளையாட்ரியா” என்று கோகுலின் வருமானத்தைத் இலவசமாகத் தணிக்கை செய்து கொண்டிருந்தாள் அவன் அம்மா.

“நா.. என்ன ம்மா… பன்றது காலேஜ்ல கேக்றாங்க” என்றான்.

“சரி ப்போ… இப்ப இல்ல வார கடைசியில வாங்கிக்கோ”.

இத்தனையையும்… கேட்டும் கேக்காததுப் போல் தன் தட்டும் வேலையை தொடர்ந்தார் ராஜன்.

கோகுல் வீட்டை விட்டு கிளம்பியா உடன் “எதுக்காம் 400 ரூபா ???” என்றார் மனைவியிடம்.

“எதோ காலேஜ்க்கு தரணுமாம் எதுக்குன்னு தெரில” என்றார் லட்சுமி.

“இங்க என்ன பணம் மரத்தலியா காய்க்குது…, ஊரு கெட்டுப் போயிருக்கு…. இது என்னத்த பன்ன பொய் சொல்லி காசு வாங்குதோ” என்று சிறிது கூட தயக்கமே இல்லாமல் பேசினார் ராஜன்.

“என் புள்ள தப்பு செய்யாது தேவ இல்லாம பேசாதீங்க” என்று புள்ளைக்கு வக்காளத்து வாங்கினால் இலட்சுமி.

“ஆமா உன் புள்ளைய நீ தான் மெச்சிக்கணும், நீ வேனும்னா பாரு” என்று கிடைத்த வாய்ப்பை வழக்கம் போல் மகனை வசைப்பாடப் பயன் படுத்திக் கொண்டார்.

அன்று சனிக்கிழமை… காலை வழக்கம் போல் தட்டும் வேலை…

கோகுல் அம்மாவிடம் சென்று “ம்மா… காசு” பருப்பு டப்பாவில் சுற்றி வைத்திருந்த 400 ரூபாவை எடுத்து தந்தாள் இலட்சுமி. மகிழ்ச்சியில் சந்தோசமாக கல்லூரிக்கு கிளம்பினான்.

அப்போது ராஜன் “இதெல்லாம் எங்கேர்ந்து உருப்டப்போது” என்றார். அடுத்த நிமிடத்தில் “அம்மா… ரொம்ப உருப்ட்டது இங்க இருக்கு பாரும்மா” என்று சொல்லி ஓடி விட்டான் கோகுல். வேறெதுவும் பேச முடியாமல் கோபத்தை கைக்கடிகாரத்தில் காட்டினர் ராஜன்.

அன்று இரவு 10 மணி ஆகியும் கோகுல் வீடு திரும்ப வில்லை. வழக்கமாக 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடும் மகன் பத்து மணி ஆகியும் வரவில்லையே என்று பதற்றத்துடன் வாசலில் இருந்தால் லட்சுமி.

மனத்திற்குள் ஒரு பயம் இருந்தாலும் “எங்க குடிச்சிட்டு கும்மாளம் போடுதோ, நீ தானே காசு கொடுத்து அனுப்புன இப்ப அழு” என்று ஆரம்பித்து விட்டார் ராஜன்.

சரியாக 10.15க்கு வீட்டிற்கு வந்தான் கோகுல் “எங்கடப் போன ???” என்றார் இலட்சுமி “இல்லமா ப்ராஜெக்ட்க் காக ப்ரௌஸ் பண்ண வேண்டியது இருந்தது அதான் ப்ரெண்டு வீட்ல இருந்தேன்” என்றான். அவன் பேசிக் கொண்டிற்கும் பொழுது கோகுலின் ஆருகில் சென்று இரண்டு மூன்று தடவை மோப்பம் பிடித்தார் ராஜன்.

சரி முகம் கழுவிக்கிட்டு வந்து சாப்டு” என்றால் லட்சுமி. கோகுல் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி விட்டு முகம் கழுவ சென்றான்.

இலட்சுமி ராஜனிடம் “ஏன் அவன அப்டி மோப்பம் புடிச்சீங்க” என்றால் அதற்கு “அவன் குடிச்சிட்டு வந்திர்கானன்னு செக் பண்ணேன்” “நீங்க திருந்தவே மாட்டீங்க” என்று சமையலறை சென்றார் லட்சுமி.

ராஜன் விறுவிறென்று கோகுலின் சட்டைப் பாக்கெட்டை துழாவிப் பார்த்தார் எதுவும் சிக்கவில்லை. இதை முகம் கழுவிவிட்டு வரும்போது கோகுல் பார்த்து விட்டான் ஆனால் ஏதும் பேசாமல் சென்று சாப்பிட்டான். பிறகு அனைவரும் படுக்க சென்றனர்.

கோகுலின் மனது மட்டும் தன் தந்தையின் நடவடிக்கையால் மிகவும் ரணமாக இருந்தது. “என்னத் தான் கெட்டுப் போக வாய்ப்புக் கிடைத்தாளும் சபலப் படாதவன்” என்று தன் நண்பர் வட்டத்தில் பாராட்டுக்கள் பெற்றிருப்பவன் கோகுல் இந்நிலையில் நடந்த நிகழ்ச்சிகள்  அவனை வாட்டி எடுத்தன “நா… என்னதான் அவருக்கு பன்னேன் எப்பயுமே என்ன எதிரியாவே பார்க்கறாரு” என்று மனதிற்குள்ளேயே புலம்பி, விழியோரம் நீர் வடியத் தூங்கினான்.

மறுநாள் வழக்கத்தை விட சற்று மங்களகரமாக இருந்தார் லட்சுமி “என்னடி இன்னிக்கு பளிச்சுன்னு இருக்க என்ன விசேஷம்” என்றார் ராஜன்.

“ம்..ம்..ம்..ம்… உங்க கடிகாரத்துக்கு வயசு 25  ஆச்சு” என்றால் குத்தலாக.

சற்று சுதாரித்துக் கொண்டு “ஒ… இன்னிக்கு நம்ம கல்யாண நாளா… சிறைப் பட்டு 25வருஷமாச்சா” என்றார் கிண்டலாக “நீங்களா ? நானா ?” என்று பதிலே கேள்வியாக வர பதில் ஏதும் கூற முடியாமல் கைகடிகாரத்தைப் பார்த்து (மனத்திற்குள் மனைவியை பார்த்து) “இத என்னிக்கு தான் மாத்தா போறேனோ” என்று சொல்லும் பொழுது ஒரு டப்பாவை ராஜன் முன் நீட்டினான் கோகுல்.

“என்னதிது ???” என்றார் ராஜன்

“தொறந்து பாருங்க” என்றான் கோகுல்.

அதை வாங்கி திறந்து உள்ளே இருக்கும் பொருளை எடுத்தார் ராஜன். கண்ணை பறிக்கும் தகத் தக என்று மின்னும் கோல்ட் பிளேட்டிங் கொண்ட டைட்டன் கைக்கடிகாரம் மதிப்பு சுமார் 3500 ரூபாய் இருக்கும்.

“காலேஜ் சேர்ந்ததுலேர்ந்து, தரக் காசுல சேத்துவச்சு வாங்கினதுத் தான்…. கொடுத்த காச சிகரெட் குடிச்சிட்டு, தண்ணி அடிச்சிட்டு கும்மாளம் போடல….. கைக்கடிகாரத்தத் திருத்தனும்னுச் சொன்னீங்க… திருத்திட்டேன்… வீட்ல இருக்குறச் சிலதத் திருத்தனும்னு சொன்னீங்க அதெல்லாம் எப்பயுமே கரெக்ட்டா தான் இருக்கு” என்று சொல்லி நன்பனை பார்க்க வெளியில் கிளம்பினான்.

எதிர்த்து பேச வாயில்லாமல்….. கையில் கைக்கடிகாரத்துடன் “திருந்த வேண்டியது நீ தான்” என்று சொல்லாமல் சொல்லி விட்டு போறான் என்பதை புரிந்து கண்களில் ஓரம் கண்ணீருடன் ராஜன்…………..

“நீராக வடிந்தது அவர் கண்ணீர் மட்டும் அல்ல இத்தனை நாளாய் தன் மகனை எதிரியாகப் பார்த்த அவர் கண்ணோட்டமும் இருவருக்கும் இடையில் இருந்த பனிமலையும் தான்”

இந்த கதையை படித்துவிட்டு தந்தை மீதே எல்லா தவறும்….. என்ற கண்ணோட்டத்துக்கு வந்து விடாதீர்கள். கண்டிப்பாக இருந்தால் தான் மகன் ஒழுக்கத்தோடு வளர்வான் என்ற ஒரு நல்ல எண்ணத்தினால் கூட ராஜன் அப்படி நடந்திருக்கலாம்.

தந்தை மகன் என்ற உறவு சற்று வித்தியாசமான உறவு. இந்த உறவில் உணர்வு என்பது குறைவு தான் இந்த உறவை எதன்கூடவும் ஒப்பிடமுடியாது எப்போதுமே இந்த உறவில் ஒரு பெரிய இடைவேளி (GAP or BARRIER)  இருக்கத்தான் செய்கிறது. ஒரு மகன் உலகத்தை பார்க்கும் விதத்தை முதல் குருவான தன் தந்தையிடம் தான் கற்றுகொள்கிறான் அதற்குரிய  மரியாதையை தந்தைக்கும், உலகம் இன்னதென்று அறிந்த பிறகு அவன் செய்வது சரியானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையை தந்தை  மகனுக்கும் தரவேண்டும். இந்த மரியாதையும், நம்பிக்கையும் இருந்தால் தந்தை மகன் உறவு இனிமையாகவும் வலிமையாகவும் அமையும்.

ராஜனுக்கு முற்றிலும் எதிர்மறையான குணத்தைக் கொண்ட தந்தைக்கு மகனாக

ஸ்ரீ

PLEASE COMMENT DOWN….

FORGIVE TYPO ERRORS

FOLLOW MY PAGE

Advertisements

4 Comments Add yours

  1. awesome bro…. ❤ ❤ (y)

    1. Raji Ravi says:

      sema,,,,,,,,,,,,thambi,,,,,,,,,,,,,,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s