அப்போ அத்தனையும்… ?

அப்போ அத்தனையும்… ?

“போகாத ஹன்ஷிகா…கா…கா”……. என்றே…தூக்கத்தில் மொபைளை எடுத்து நேரம் பார்த்தேன்………..

ஏழே முக்கா வா…??? அம்மா பேயோட்ட ஆரமித்து விடுவாலே என்று அவசர அவசரமாய் போர்வையை எடுத்து சுருட்டி வைத்தேன்.

தெளிவா போனா அம்மா வாயில் விழ வேண்டும் என்று உடம்பு வலி போல் பாவ்ல காட்டி கொண்டு அறையினில் இருந்து வெளியே வந்தேன் என்ன ஒரு ஆச்சரியம் யாரும் இல்லை தப்பித்தோமடா சாமி என்று குளியலறை சென்று பல் துளக்கி,முகத்தை கழுவி கொண்டு வெளியே வந்தேன். துண்டில் முகத்தை துடைத்து கொண்டே என்ன என் ஆளுங்களே காணோம் அதான் அப்பா அம்மா தங்கை என்று மனதில் நினைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தேன் வீட்டில் உள்ள பொருள் எல்லாம் களைந்திருந்தது. சரி மேலே சென்று பார்க்கலாம் என்று இரும்பு கேட் அருகே சென்றேன் அது உள் வழியாக பூட்டப் பட்டிருந்தது. பூட்டப் பட்டிருந்த கதவைப்  பார்த்ததுமே மனத்திற்குள் ஒரு பயம் உருவானது. சரி அம்மா உடைய செல்லுக்குக் கால் பண்ணிப் பார்க்கலாம் என்று என் கைபேசியை எடுக்க என் அறைக்கு சென்றேன். அப்பொழுது, வீட்டின் லேன்ட் லைன் ஒலித்தது அம்மாவத்தான் இருக்கும் என்று எடுக்க சென்றேன் போன் கட் ஆகி விட்டது. நான் அம்மாக்கு டயல் செய்தேன் பிஸி டோன்…….., இரண்டம் முறை பிசி டோன்………, மூன்றாம் முறை பிஸி டோன்……..ஒருவேளை அம்மாவே எனக்கு ட்ரை செய்கிறார்களோ என்று போனை கீழே வைத்து காத்திருந்தேன். மணி அடித்தது இரண்டாம் மணியிலேயே எடுத்தேன் நல்ல வேலை அம்மா தான்.

“எங்க மா இருக்கீங்க யாருமே காணோம் எங்கே  போனீங்க வீட்ல இருக்க பொருல்லாம் களஞ்சிருக்கு”

அதற்கு அம்மா “எதையும் பேசாத உன்னோட காலேஜ் பேக்ல ரெண்டு நாளுக்குத் தேவையானத் துணிய எடுத்து வெச்சுக்கிட்டு பழைய விமான நிலையத்துக்கு ஆட்டோ புடிச்சி வா சீக்கிரம்…”

“டிரஸ் எடுத்துக்கிட்டு எதுக்கு அங்க வரணும் மொதல எங்க இருக்கீங்க…”

“எதுவும் கேக்காதனு சொன்னேன்ல வா-ன்னா…வா…”

அதற்கடுத்து “டொய்ங்.. டொய்ங்… டொய்ங்” கால் கட் செய்ய பட்டது.

ச்சே… என்றே என் டிரெஸ்ஸை எடுத்து பையினுள் வைத்தேன், கட்டில் மேல் இருந்த என் புது ஈயர்போன்(earphone)  “என்ன விட்டு போறியே” என்று பாவமா பாத்தது… எடுத்து வைத்துக்கொண்டேன் மனத்திற்குள் “எதற்கு போறேனே தெர்ல இது கொறச்சலா..?” என்று ஒரு கேள்வி நம்ம என்னிக்கு மனசாட்சிய மதிச்சிருக்கோம் வழக்கம்போல் மிதித்து விட்டு நடையை  கட்டினேன்.

ஆட்டோவில் ஏறி பழைய விமான நிலையம் என்றேன் ஐம்பது நிமிட பயணத்துக்கு பிறகு ஒரு இடத்தில் இறக்கி

“அதோ…தெரிது பார் அதான்” என்று விரர்ர்ர்ர்… என்று பறந்தார் ஆட்டோகாரர்.

உண்மையிலேயே பழைய விமான நிலையம்தான் பாழடைந்த கட்டிடம் அதிலும் பாதி இரு மாடி  கட்டி முடிக்க வில்லை… சரி என்று உள்ளே நுழைந்தேன் சிறிது தூரம் நடந்து சென்றதும் அதிர்ச்சி………. ஒரு ஐம்பது வயது நிறைந்த  ஆண் தரையில் பதறி கொண்டு அருகில் சென்றேன் உடம்பு முழுதும் இரத்தம் நான் வந்ததை அறிந்த அவர் முடியாமல் கையை மட்டும் தூக்கி கட்டிடத்தின் ஒரு திசையை காட்டி அசைத்தார். இரண்டு அசைவு தான் பின் தலைத் தரையில்.. ஆம்.. இறந்து விட்டார். என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் தரையில் அமர்ந்தேன் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு சுதாரித்துக் கொண்டு அவர் என்ன சொல்ல வந்தார் என்று புரியாமல் குழப்பத்துடன்… ஒரு வேளை என் குடும்பத்துக்கு எதாவது??? “ஐயோ” என்று அவர் காட்டிய திசையை நோக்கி வேகமாக ஓடினேன்…

அது முதல் மாடிக்கு சென்றது இன்னும் முன்னேறி சென்றேன், அது அந்த கட்டிடத்தின் பின்புறத்துக்கு என்னை இட்டுச்சென்றது பின்புறம் ஒரு ஏரி போல் தோற்றம் தந்தது,

ஆம்….. நான் எதிர் பார்த்தது போல் அங்கே யாரோ இருக்கிறார்கள். அருகில் சென்றேன் ஒரு கட்டுமஸ்தான ஆண் நின்றிருந்தான். அவன் அருகில்  சென்று பேச முற்பட்டப்பொழுது அவன் கை ஒரு திசையை நோக்கி காட்டியது. அங்கே பார்த்தப் பொழுது ஏரியின் நடுவே ஒரு மணல் திட்டு போல் இருந்தது அங்கே என் அம்மா, அப்பா, தங்கை……………. அப்போழுது மனதில் பல கேள்விகளின் நடுவே மகிழ்ச்சி பொங்கியது. அந்த நொடியில் என் கைபேசி அலறியது… அம்மாதான்….

“சீக்கிரம் இங்கே வா” என்று சொல்லி கட் செய்தார்கள்.

அப்பொழுது உடனே ஒரு ஹெலிக்கொப்டர் அந்த மணல் திட்டு மேல் இறங்கியது மூன்று பெரும் அதில் ஏறினர்.

குழப்பம் மேல் குழப்பம்… கேள்வி மேல் கேள்வி…

உடனே கூட இருந்த அந்த நபர் “நீச்சல் தெரியுமா?” என்று முரட்டு தனத்துடன் கேட்டார்.

“தெரியாது” என்றேன். நான் அடுத்த கேள்வியை கேக்கும் முன் ஒரு மஞ்சள் வண்ண நீச்சல் பயிலும் வளையத்தை மாட்டி….. தண்ணியில் தள்ளி விட்டான்….கவுந்தடித்து விழுந்தேன் தண்ணீரில்…..

போர்வை,மெத்தை எல்லாம் தண்ணீர்…. முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்து கண் திறந்து பார்த்தாள் மஞ்சள் நிற பக்கெட் உடன் அம்மா திட்டி கொண்டே சென்றுக்கொண்டிருக்கிறாள். மொபைலை எடுத்து மணி பார்த்தேன் மணி ஏழே முக்கா……..அப்போ அத்தனையும்…. ???

டொய்ங்… டொய்ங்… டொய்ங்… டொய்ங்… டொய்ங்… டொய்ங்… டொய்ங்…

கனவுடன்

ஸ்ரீ

 

 forgive my typo errors………..

Advertisements

3 Comments Add yours

  1. Pingback: LifeOfSri

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s